தேசிய விருது பெற்ற சிரிப்பு அழகி கீர்த்தி சுரேஷ்..!!
- 66-வது தேசிய திரைப்பட விருதுகள் விவரங்களை கடந்த ஆகஸ்டு மாதம் விருதுகளுக்கான பட்டியலை தலைவர் ராகுல் ரவைல் அறிவித்தார்.
- ‘மகாநடி’படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷ்க்கு விருது வழங்கப்பட்டது.
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாகி இருப்பவர் நடிகை கீர்த்தி சுரேஷ். சென்ற வருடத்திற்கான தேசிய விருது பட்டியலில் மகாநதி படத்திற்காக சிறந்த நடிகாக்கைக்கான விருது பெற்றார்.
66-வது தேசிய திரைப்பட விருதுகள் விவரங்களை கடந்த ஆகஸ்டு மாதம் விருதுகளுக்கான நடுவர்களின் தலைவர் ராகுல் ரவைல் அறிவித்தார்.வழக்கமாக தேசிய விருதுகளை குடியரசுத் தலைவர் தான் வழங்குவார். ஆனால் அவர் இல்லாததால் தற்போது ராம்நாத் கோவிந்துக்கு பதிலாக வெங்கய்ய நாயுடு விருதுகளை வழங்கினார்.
மேலும் விருதுகளை பெற்றவர்களுக்கு இன்று மாலை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேநீர் விருந்து அளிக்கவுள்ளார். ‘மகாநடி’படத்தில் நடித்ததற்காக அவருக்கு இந்த விருதானது வழங்கப்பட்டது. தமிழில் சிறந்த படமாக “பாரம்” படம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.