துப்பாக்கி சுடுதலில் வீராங்கனையாக கீர்த்தி சுரேஷ்.! ‘குட் லக் சகி’ படத்தின் டீசர் இதோ.!
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகும் குட் லக் சகி படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்திலும், தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்திலும், நித்தீன் சத்யாவின் ஒரு படத்திலும் கமிட்டாகியுள்ளார். அதனையடுத்து தெலுங்கில் நாகேஷ் குக்குனூர் இயக்கும் ‘குட் லக் சகி’ படத்தில் நடிக்கவுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகும் இந்த படத்தில் ஆதி பினிசெட்டி மற்றும் ஜகபதி பாபு நடிக்க தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.
தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வடமாநில பெண்ணாக நடித்துள்ள கீர்த்தி சுரேஷ் எப்படி துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் ஒலிம்பிக் நாயகியாக ஜொலிக்கிறார் என்பது தான் கதையாம். பெண் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த கீர்த்தி சுரேஷின் குட் லக் சகி படத்தின் டீசர் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.