கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு 2 ல் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகை கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் பெங்குயின் படம் அமேசான் பிரேமில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனையடுத்து ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் கமிட்டாகியுள்ளார். அதில் அவர் ரஜினிகாந்திற்கு சகோதரியாக நடிப்பதாக கூறப்படுகிறது அது மட்டுமின்றி தெலுங்கு சூப்பர் ஸ்டாரான மகேஷ் பாபுவின் SarkaruVaariPaata படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார்.
இந்த நிலையில் தற்போது இவர் கமல்ஹாசனின் வேட்டையாடு விளையாடு 2 – ல் நடிக்க போவதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவு செய்துள்ளதாகவும், அதனை வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பதாகவும் கூறப்பட்டது. முதலில் இந்த படத்தில் அனுஷ்கா நடிப்பதாக தகவல்கள் வெளியாகியது. ஆனால் தற்போது கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த படம் இரட்டை ஹீரோயின்களை கொண்டதா? அல்லது அனுஷ்காவிற்கு பதிலாக கீர்த்தியா? என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானால் தான் தெரிய வரும்.
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…
இஸ்லாமாபாத் : நேற்று போலன் மாவட்டத்தில் பலுசிஸ்தான் கிளர்ச்சி அமைப்பான பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் (BLA) சுமார் 500 பயணிகளுடன்…
டெல்லி : தொகுதி மறுசீரமைப்புக்கு எதிராக சென்னையில் வரும் 22 ஆம் தேதி திமுக சார்பில் ஆலோசனைக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு…
பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு தொடங்கியதிலிருந்து அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக மாறியிருக்கிறது. ஏனென்றால், இந்த கூட்டத்தொடரில்…
சென்னை : மும்மொழிக் கொள்கை தொடர்பான விவாதத்தில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்ப அமைச்சர்…