ஸ்நுக்கரில் சர்வதேச அளவில் பதக்கம் வென்ற இந்திய சிறுமி!
சர்வதேச அளவில் 16 வயதிற்கு உட்பட்ட சிறுவர் சிறுமியர்களுக்கான ஸ்நூக்கர் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை, பில்லியார்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் கூட்டமைப்பு நடத்தியது. இதில் இந்தியாவை சேர்ந்த கீர்த்தனா எனும் சிறுமியும் கலந்து கொண்டார்.
இப்போட்டியில் முதல் சுற்றிலேயே நாக் அவுட் செய்து வெற்றி பெற்றார். அடுத்த போட்டியில், முதல் சுற்றில் தோற்றாலும்,அடுத்த சுற்றில் 3-1 என்ற கணக்கின் மூலம் வெற்றி கண்டார். பிறகு இறுதி போட்டியில் பெலரஸ் நாட்டின் அல்பினா லெஸ்சுக் என்பவரை 3-1 என்ற செட் கணக்கில் தோற்கடித்து வெற்றி கண்டார்.
DINASUVADU