தூங்கும் போது கைக்கடிகாரத்தை இங்கு வைக்கிறீர்களா? எதிர்மறை ஆற்றல் அதிகரிக்கும்..!

பலருக்கு கைக்கடிகாரங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் அன்றைய அவர்களின் அலங்காரத்திற்கு ஏற்ப அவற்றை அணிவார்கள். மணிக்கட்டில் அணியும் கடிகாரத்தைப் பற்றி இன்று தெரிந்து கொள்ளுங்கள். பொதுவாக மக்கள் தூங்கும் போது கடிகாரத்தை அணிந்து கொண்டும், தலையணைக்கு கீழ் கையை வைத்துக்கொண்டும் தூங்குவார்கள். ஆனால் அதுபோல் கைக்கடிகாரத்தை தலையணைக்கு அடியில் வைக்கக்கூடாது.
தலையணைக்கு அடியில் கைக்கடிகாரத்தை வைத்து உறங்குவதால், தூக்கம் கெடுவது மட்டுமின்றி, அதில் இருந்து வெளிப்படும் மின்காந்த அலைகளும் நம் மனதிலும் இதயத்திலும் மோசமான பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்த அலைகள் காரணமாக, உங்கள் அறை முழுவதும் எதிர்மறை ஆற்றல் உருவாகிறது. இது உங்கள் மன அமைதியைக் குலைத்து பதற்றத்தை ஏற்படுத்துகிறது. அதே நேரத்தில், இது உங்கள் சிந்தனையை எதிர்மறையாக மாற்றுகிறது.