கடை கட்ட நினைக்கிறீர்களா? அப்போ இதெல்லாம் ஞாபகம் வச்சுக்கங்க..!
கடை கட்டும் போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். மார்க்கெட்டுக்கு செல்லும் போது மளிகை, ஸ்டேஷனரி, துணிக்கடை, நகை கடை, காய்கறிக்கடை என பல வகையான கடைகளை பார்த்து வருகிறோம். ஒவ்வொரு கடைக்கும் அதன் சொந்த அடையாளங்கள் உள்ளன. அதேபோல் வாஸ்து விதிகள் இந்தக் கடைகளுக்கும் பொருந்தும்.
கடையின் நுழைவு வாடிக்கையாளரின் முதல் பார்வைக்கு வருமாறு இருக்க வேண்டும். வாஸ்து சாஸ்திரத்தின்படி, கடையின் நுழைவாயிலுக்கு கிழக்கு திசை, வடக்கு திசை மற்றும் வடகிழக்கு ஆகியவற்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்படி இருந்தால் கடையின் வருமானம் அதிகரிக்கும். கடையின் நுழைவாயில் மேற்கு மற்றும் தெற்கு திசையில் அமைக்கப்படக்கூடாது. ஏனென்றால் அது வியாபாரத்தில் சிக்கல்களை கொண்டு வரும்.