பரியெறும் பெருமாள் படத்தினை தொடர்ந்து கல்லூரி மாணவியாக ‘கயல்’ ஆனந்தி.! ஹீரோ, இயக்குனர் யார் தெரியுமா.?

Default Image

கயல் ஆனந்தி அடுத்ததாக நடிக்கவிருக்கும் படத்தில் கல்லூரி மாணவியாக நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கயல் ஆனந்தி.கயல் ,சண்டி வீரன்,பரியெறும் பெருமாள் உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான இவர் சமீபத்தில் தனது காதலனான சாக்ரடீஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர் தற்போது டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், அலாவுதீனின் அற்புத கேமரா, ராவணக் கூட்டம், தெலுங்கில் ஸோம்பி ரெட்டி உள்ளிட்ட சில படங்களை தனது கைவசம் வைத்துள்ளார்.

இந்த நிலையில் தற்போது புதிய படமொன்றில் கமிட்டாகியுள்ளார்.உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தினை தாமரை செல்வன் என்ற அறிமுக இயக்குனர் இயக்குகிறார்.இவர் மோகன்ராஜா இயக்கத்தில் வெளியான வேலைக்காரன் படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.கல்லூரியில் நிலவும் அரசியல் மற்றும் சாதி செல்வாக்குகள் குறித்து கூறும் இந்த படத்தில் ஹீரோவாக சாம் ஜான் நடிக்கிறார்.அவர் ஏமாளி ,லிசா உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.அவருக்கு ஜோடியாக ஆனந்தி நடிக்கிறார்.இருவரும் கல்லூரி மாணவர்களாக நடிக்கும் இப்படத்தில் முனீஷ்காந்த், ஏ வெங்கடேஷ் மற்றும் சுரேகா வாணி ஆகியோரும் நடித்துள்ளனர். திபு நினன் தோமஸ் இசையமைக்கவுள்ள இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
Germany 2 Dead
Heinrich Klaasen
viduthalai 2
kovi chezhiyan
Zia ur Rehman
rain