சாம் ஜோன்ஸ் தயாரித்து நடிக்கும் படத்திற்கு நதி என்று பெயரிடப்பட்டுள்ளது .
ஏமாலி,லிசா உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களின் மத்தியில் பிரபலமானவர் சாம்ஜோன்ஸ் .இவர் தற்போது ‘ரூபம்’ எனும் படத்தினை இயக்கி வரும் தாமரை செல்வன் இயக்கும் படத்தில் நடித்து தயாரிக்கவுள்ளார்.இயக்குனர் தாமரை செல்வன் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த படத்தினை தனது தயாரிப்பு நிறுவனமான மாஸ் சினிமாஸ் நிறுவனம் மூலம் சாம்ஜோன்ஸ் தயாரிக்கிறார் .திபு நினன் தோமஸ் இசையமைக்கவுள்ள இந்த படத்தில் சாம்ஜோன்ஸூக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார்.மேலும் இந்த படத்தில் வில்லனாக பிரபல இயக்குனர் ஒருவர் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில் தற்போது சாம்ஜோன்ஸ் தயாரித்து நடிக்கும் படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டுள்ளது.’நதி’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் மைக்செட் ஸ்ரீராம்,சுரேகா வாணி ,முனீஷ்காந்த் ,வேலராமமூர்த்தி ,ஏ.வெங்கடேஷ் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.மதுரை ,தேனி உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற வந்த இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை : சென்னை முன்னாள் அதிமுக மேயர் சைதை துரைசாமி இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விஷயங்களை தெரிவித்தார். …
ஜெர்மனி : உலகப் புகழ் பெற்ற செஸ் வீரர் மேக்னஸ் கார்ல்சன் ஜெர்மனியில் உள்ள வைஸ்ஸென்ஹாஸில் நடைபெறும் பிளைண்ட்ஃபோல்டு ஃப்ரீஸ்டைல்…
கொல்கத்தா : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் மோதி…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 7)…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் சர்மாவின் ஐபிஎல் பார்ம் இந்த ஆண்டு மிகவும் கவலைக்கிடமாக…
சென்னை : கடந்த மார்ச் 6 முதல் 8 வரை, மத்திய அமலாக்கத்துறை (ED) டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் திடீர்…