கவாஸாகி நிறுவனம், இந்தியாவில் தனது புதிய கவாஸாகி 2021 Z650-ஐ அறிமுகப்படுத்தியது. அதன் விலை மற்றும் முழு விபரங்கள் குறித்து காணலாம்.
ஸ்போர்ட்ஸ் பைக் என்றாலே பலருக்கும் முதல் முதலில் நியாபகம் வருவது, கவாஸாகி நிஞ்ஜா தான். அதன்பின் பலருக்கும் பிடித்த பைக், கவாஸாகி Z series தான். உலக சந்தைகளில் ஏத்தனையோ பைக்குகள் வெளிவந்தாலும், ஜப்பானின் கவாஸாகி பைக்குகளுக்கென ஒரு தனி ரசிகர் மன்றமே உண்டு.
அந்தவகையில் கவாஸாகி, இந்தியாவில் தனது புதிய கவாஸாகி 2021 Z650-ஐ அறிமுகப்படுத்தியது. அதன்படி இந்த பைக்கில் 4.3 இன்ச் TFT டிஸ்ப்ளே, 15 லிட்டர் கொண்ட பெரிய பியுல் டேன்க் உள்ளிட்ட பல வசதிகள் உள்ளது. மேலும், கேடிஎம் டியூக் 790, சுஸுகி ஜிஎஸ்எக்ஸ்-750, ராயல் என்ஃபீல்டு கான்டினென்ட்டல் ஜிடி 650, ஹார்லி-டேவிட்சன் ஸ்ட்ரீட் 750 உள்ளிட்ட பைக்குகளை காம்படிஷனாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பைக்கின் வெயிட்டை பொறுத்தளவில், இது 194 கிலோ எடை கொண்டுள்ளது. இதனால் இதனை கையாள்வது கடினம் என நினைத்து விட வேண்டாம். இதன் டிசைன், கவாஸாகி Z900 மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 15 லிட்டர் பியுல் டேன்க் வசதி கொண்டுள்ளதால், தொலைதூர பயணத்திற்கு இது சிறந்த பைக்காக அமையும்.
முன்புறத்தில் 41mm டெலஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷனும், பின்புறத்தில் adjustable மோனோ ஷாக் சஸ்பென்ஷன் பொருத்தப்பட்டுள்ளது. பிரேக்கிங் சிஸ்டமை பொருத்தளவில், இதில் முன் மற்றும் பின்புறத்தில் டிஸ்க் பிரேக் மற்றும் டூயல் சேனல் abs வழங்கப்பட்டுள்ளது.
இதன் என்ஜினை பொறுத்தளவில், லிக்யூடு கூல்டு 650 சிசி இன்லைன் 2 சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக 8,000 rpm-ல் 97.3 hp பவரும், 6,700-rpm-ல் 64 NM டார்க் வெளிப்படுத்தப்படும். இந்த என்ஜினில் ஃப்யூவல் இன்ஜெக்ஷன் வசதி உள்ளது. இதனை இயக்க 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.
லைட்-ஐ பொறுத்தளவில் இதில் முழுக்க முழுக்க எல்.இ.டி. லைட்டிங்-ஐ கொண்டுள்ளது. இந்தியாவில் 2021 கவாசாகி Z650, மெட்டாலிக் ஸ்பார்க் பிளாக் கலரில் வருகிறது. இதன் விலை ரூ.6,04,000 (எக்ஸ்-ஷோரூம்) என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…