வெளியானது கவாஸாகியின் புதிய நிஞ்ஜா 250.. இந்தியாவில் அல்ல “ஜப்பானில்”

Default Image

ஜப்பானை தலைமையாக கொண்டுள்ள கவாஸாகி நிறுவனம், ஜப்பானில் தனது புதிய நிஞ்ஜா 250 பைக்கை அறிமுகப்படுத்தியது.

ஸ்போர்ட்ஸ் பைக் என்றாலே பலருக்கும் முதல் முதலில் நியாபகம் வருவது, கவாஸாகி நிஞ்ஜா தான். உலக சந்தைகளில் ஏத்தனையோ பைக்குகள் வெளிவந்தாலும், ஜப்பானின் கவாஸாகி நிஞ்ஜா பைக்குகளுக்கென ஒரு தனி மரியாதை உண்டு. தற்பொழுது கவாஸாகி நிறுவனம், ஜப்பானில் தனது புதிய நிஞ்ஜா 250 ரக பைக்கினை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த பைக்குகள், ஜப்பான் மார்க்கெட்டில் இந்த மாதம் முதல் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக்கில் பெரியளவில் மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. கலர் ஆப்ஷன்ஸ் மற்றும் கிராபிக்ஸ் ஸ்டிக்கர்களை தவிர்த்து. மேலும், பழைய நின்ஜாவில் இருப்பதுபோல அதே எல்.இ.டி. ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், மஸ்குலர் டிசைன், மீடியமான இருக்கை அமைப்பு உள்ளிட்டவை அப்படியே இருக்கின்றது.

இந்த பைக்கின் என்ஜினை பொறுத்தளவில், 248 சிசி இரட்டை சிலிண்டர் லிக்யூடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த பைக்கில் அதிகபட்சமாக 12,500 ஆர்பிஎம்-ல் 36.2 பிஎச்பி மற்றும் 10,000 ஆர்பிஎம்-ல் 23 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும். இதனை இயக்க 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. மேலும் இதில் ஸ்லிப்பர் மற்றும் அசிஸ்ட் க்ளட்ச் வசதியுடன் வருகிறது.

சஸ்பென்ஷனை பொறுத்தளவில், முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் மற்றும் பின்புறத்தில் மோனோஷாக் சஸ்பென்ஷன் வசதியுடன் வருகிறது. மேலும், முன்புறத்தில் 310மிமீ டிஸ்க் ஏபிஎஸ் பிரேக்குடன் வருகிறது. பின்புறத்தில் 220மிமீ டிஸ்க்குகள், தேவைப்பட்டால் ஏபிஎஸ் உடன் வாங்கிக்கொள்ளலாம் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் விலையை பொறுத்தளவில் 6,54,500 Yen (இந்திய மதிப்பில் 4.62 லட்சம்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது மெட்டாலிக் கார்பன் க்ரே மற்றும் KRD எடிசன் என இரண்டு நிறங்களில் வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்