கவினின் பிறந்தநாள் ஸ்பெஷல்.! லிப்ட் படக்குழுவினர் வெளியிட்ட புகைப்படங்கள்.!

Default Image

பிறந்தநாளை கொண்டாடும் கவின் அவர்களுக்கு பிறந்தநாள் பரிசாக லிப்ட் படத்தின் புகைப்படங்களையும், மேக்கிங் வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்.

கவின் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானவர். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி தொடர் மூலம் ரசிகர்களின் வரவேற்பை பெற்றார். அதன் பின்னர் வெள்ளித்திரையில் காலெடுத்த கவின், உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 மூலம் காதல் மன்னனாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். தற்போது இவருக்கென்று பல சமூக வலைத்தளங்களில் கவின் ஆர்மி என்ற பெயரில் தொடங்கி இவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.தற்போது இவர் லிப்ட் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இவருக்கு ஜோடியாக பிகில் பட பிரபலமான அமிர்தா ஐயர் நடித்துள்ளார். கொலை மற்றும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் நிறைந்த லிப்ட் படத்தை வினீத் வரபிரசாத் இயக்கி ஹெப்சி தயாரிக்கிறார். சமீபத்தில் அந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ர் வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.

இன்று பிறந்தநாளை கொண்டாடும் கவின் அவர்களுக்கு அவரது ரசிகர்கள் ஹேஷ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர். தளபதி விஜய் பிறந்த நாளன்று பிறந்த கவின் பல மில்லியன் ட்வீட்களை பெற்று டுவிட்டரில் சாதனை செய்து வருகிறது. இந்நிலையில் லிப்ட் படக்குழுவினர் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களையும், மேக்கிங் வீடியோவையும் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியிட்டுள்ளனர். தற்போது அதனை கவின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்