காப்பான் சூர்யாவை பாராட்டிய தமிழக காவிரி விவசாயிகள்!

சூர்யா நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் காப்பான். இந்த படத்தை கே.வி.ஆனந்த் இயக்கி உள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சூர்யா பிரதமரின் பாதுகாவலராக நடித்துள்ளார். மோகன்லால் பிரதமராக நடித்துள்ளார்.
இப்படத்தின் விவசாயிகள் பிரச்சனை பற்றியும், காவிரி டெல்டா பகுதியில் ஏற்படுத்தப்படும் திட்டங்கள் என அது குறித்து அப்படத்தில் கட்டப்பட்டிருந்தது. இதில் படக்குழுவினரை பாராட்டி காவிரி விவசாயிகள் சங்கள் சார்பில் சூர்யா மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் ஆகியோருக்கு பாராட்டு வழங்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் விவசாயிகளின் பிரச்சனை குறித்து மிகவும் ஆழமாக பதியப்பட்டு இருப்பதாகவும், அவர்களின் பிரச்சனை குறித்து படம் பேசியிருப்பதாகவும் காவேரி விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் பி.ஆர்.பாண்டியன் அவர்கள் விவசாயிகளோடு வந்து படக்குழுவினரை பாராட்டினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
லாரி மீது ஆம்புலன்ஸ் மோதி விபத்து – இருவர் உயிரிழப்பு.!
April 11, 2025
விஜய் தலைமையில் இன்று த.வெ.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.!
April 11, 2025