சர்ச்சை போஸ்டர்களுடன் வெளியான ‘காவல்துறை உங்கள் நண்பன்’ பட அப்டேட்!

தற்போது தமிழ் சினிமாவில் படங்களை எடுத்து எடுப்பது ஈஸி. அதனை மக்களிடம் கொண்டு சேர்த்து அவர்களின் கவனத்தை ஈர்த்து வெற்றி பெறுவது மிகவும் கடினம். நல்ல படமாக இருந்தாலும் அதற்கு சரியான விளம்பரம் இன்மையால் அப்படம் தோல்வி அடைந்து விடுகிறது. இதனால் புதிதாக படம் எடுப்பவர்கள் எப்படியேனும் ரசிகர்களின் கவனத்தை ஈர்க்க பலவிதமான பிரமோஷன் வேலைகளில் இறங்கி வருகின்றனர்.
தற்போது புதிதாக சுரேஷ் ரவி என்பவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் காவல்துறை உங்கள் நண்பன். இப்படத்தை RDM என்பவர் இயக்கி வருகிறார். பிரவீனா நாயகியாக நடித்துள்ளார். மைம் கோபி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகின. இரண்டு போஸ்டர்களில் ஒன்றில், ஒருவர் அடிப்பட்டு கிடப்பது போலவும், அவர் 2000 ரூபாய் நோட்டை போலீஸ்காரர்களிடம் நீட்டுவது போலவும், அதனை போலீஸ்காரர்கள் வாங்குவது போலவும் உள்ளது.
இன்னொரு போஸ்டரில் பைக்கில் கணவன்-மனைவி சென்று கொண்டிருக்கும்போது பின்னாடி இருந்து ஒரு போலீஸ்காரரான மைம் கோபி மிதிப்பது போலவும் உள்ளது. இந்த இரு போஸ்டர்களும் வெளியாகி தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : பூமிக்குத் திரும்பிய சுனிதா வில்லியம்ஸ் முதல்… அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கட் வரை.!
March 19, 2025
“நான் பாத்துக்குறேன் பங்கு”..மும்பை கேப்டனாகும் சூரியகுமார் யாதவ்! பாண்டியாவுக்கு BCCI செக்?
March 19, 2025