கத்தரிக்காயில் இவ்வளவு நன்மைகள் இருக்கா…? என்னென்ன நன்மைகள் இருக்கு தெரியுமா….?
கத்தரிக்காய் நமது அருகாமையில் உள்ள சந்தைகளில் மலிவாக கிடைக்க கூடிய ஒரு காய்கறி தான். இதில் உள்ள சத்துக்கள் நமது உடலில் உள்ள பல நோய்களை குணப்படுத்தக் கூடிய சத்துக்கள் கொண்டது.
சத்துக்கள் :
கத்தரிக்காய் நீர்சத்து கொண்டது. இதில் வைட்டமின் ஏ, சி, பி1 மற்றும் பி2 போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதில் இரும்பு சத்து, புரதம், நார்சத்து, கார்போஹைட்ரேட், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது.
பயன்கள் :
- இது வாதநோய்களை நீக்க கூடிய தன்மை உள்ளது.
- ஈரலை பாதுகாக்க கூடிய சத்துக்கள் அதிகமாக உள்ளது.
- இது அலர்ஜி நோய்களை குணப்படுத்தக்கூடியது.
- சளி, இருமல் போன்ற பிரச்சனைகளை நீக்க கூடியது.
- பிஞ்சு காய்களை சாப்பிடுவது நல்லது. முற்றிய காய்களை சாப்பிடுவதால் தான் உடலில் அரிப்பு ஏற்படும்.
- உடல் சோர்வை நீக்குகிறது.
- பசியின்மையை நீக்குகிறது.