“அக்னி நட்சத்திரம்” தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாகும் கஸ்தூரி.!

நடிகை கஸ்தூரி அடுத்ததாக சன்டிவியில் ஒளிப்பரப்பாகும் அக்னி நட்சத்திரம் தொடரில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
சினிமாவில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தற்போது சின்னத்திரையிலும் நடித்து வருகின்றனர் . அந்த வகையில் ராதிகா , குஷ்பூ, பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலர் சீரியலில் நடித்து குடும்ப ரசிகர்களையும் கையில் எடுத்துள்ளனர் .அந்த வகையில் தற்போது நடிகை கஸ்தூரி சன்டிவியில் ஒளிப்பரப்பாகும் தொடர் மூலம் சின்னத்திரையில் அறிமுகமாக உள்ளதாக கூறப்படுகிறது.
தமிழில் பல படங்களில் நடித்த கஸ்தூரி வழக்கமாக சமூக ஊடகங்களில் கருத்துக்களை தைரியமாக பதிவிட்டு சர்ச்சைகளில் சிக்குவதும் , பாராட்டுகளையும் பெறுவதும் வழக்கம்.அடிக்கடி தனது கலக்கல் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிடும் கஸ்தூரி தெலுங்கில் பிரபல சீரியல் ஒன்றில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் தற்போது கஸ்தூரி சன்டிவியில் ஒளிப்பரப்பாகும் அக்னி நட்சத்திரம் தொடரில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.விரைவில் இவரை சின்னத்திரை தொடர்களில் பார்க்கலாம் .