தமிழகம் – அசுர சாதனை! தமிழனென்று சொல்லடா! தள்ளாடி நில்லடா! தமிழக அரசை விளாசிய கஸ்தூரி!
நடிகை கஸ்தூரி பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் ஆத்தா உன் கோயிலில் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
இந்நிலையில், நடிகை கஸ்தூரி தமிழக அரசை கலாய்த்து தனது ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.அவர் பதிவிட்டுள்ள பதில், ‘டாஸ்மாக் விற்பனையில் தமிழக அரசு சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த வருடம் தீபாவளிக்கு 455 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளது. தமிழனென்று சொல்லடா, தள்ளாடி நில்லடா !’ என்று பதிவிட்டுள்ளார்.
*தமிழகம் – அசுர சாதனை!*
டாஸ்மாக் விற்பனையில் தமிழக அரசு சரித்திர சாதனையை நிகழ்த்தியுள்ளது.
25-10-2019 = 100cr 26-10-2019 = 183 cr 27-10-2019 = 172 cr ஆகமொத்தம் 455 கோடி ரூபாய் அளவிற்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளது.????????????
தமிழனென்று சொல்லடா, தள்ளாடி நில்லடா ! ????????#TASMAC
— Kasturi Shankar (@KasthuriShankar) October 28, 2019