கருமை நிறம் குறித்து கவலைப்படுகிறீர்களா? இனிமேல் இந்த கவலை வேண்டாம்…!!!
இன்றைய இளம் தலைமுறையினரின் மிக முக்கியமான கவலை என்னவென்றால் அது அவர்களது கருமை நிறம் தான். இதற்காக பலரும் பல வழிகளை மேற்கொண்டிருப்பார். ஆனால் அதனால் நல்ல பலன் கிடைப்பதில்லை. சில வழிமுறைகளை பின்பற்றும்போது அது தேவையற்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்துகிறது.
தேவையான பொருட்கள் :
- கேரட் – 1
- தக்காளி – 1
- பசும்பால் – சிறிதளவு
செய்முறை :
கேரட்டை தோல் சீவாமல் நன்கு கழுவ வேண்டும். பின்பு மிக்சியில் சிறு சிறு துண்டாக வெட்டி போட வேண்டும். பின் தக்காளியை நன்கு கழுவி தோல் நீக்காமல் சிறு சிறு துண்டுகளாக வெட்டி போட்டுக்கொள்ள வேண்டும். இரண்டையும் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ள வேண்டும். இதில் தண்ணீர் சேர்க்க கூடாது. பின் அதை ஒரு சின்ன பாத்திரத்தில் எடுத்து மிகவும் தண்ணீர் போன்று ஆகாமல், கொஞ்சம் கெட்டியாக இருக்குமாறு பசும்பால் ஊற்ற வேண்டும். அதன்பின் இதை இரவு நேரங்களில் மட்டுமே முகத்தில் பூசிக்கொண்டு படுக்க வேண்டும்.