முத்தையா – கார்த்தி கூட்டணியில் உருவாகும் படத்தில் அபர்ணா பாலமுரளி நாயகியாக நடிக்கவுள்ளார்
நடிகர் கார்த்தி தற்போது இயக்குனர் மணி ரத்தனம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும், பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் பி எஸ் மித்ரன் இயக்கத்தில் இரட்டை வேடங்களில் சர்தார் படத்தில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் 80 % படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், நடிகர் கார்த்தி அடுத்ததாக கொம்பன் படத்தை இயக்கிய முத்தையா இயக்கும் படத்தில் கார்த்தி நடிக்கவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. முத்தையா இயக்கும் படத்தை முடித்த பின் மீண்டும் சர்தார் படப்பிடிப்பில் பங்கேற்வுள்ளார்.
முத்தையா இயக்கும் இந்த படத்தை நடிகர் சூர்யா தனது 2D நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார் எனவும் சில நாட்களுக்கு முன்பு தகவல் கசிந்தது. ஆனால் இன்னும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
இதனையடுத்து தற்போது கிடைத்த தகவலின் படி, இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக நடிகை அபர்ணா பாலமுரளி நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அபர்ணா பாலமுரளி இதற்கு முன் சூர்யாவிற்கு ஜோடியாக சூரரைப்போற்று படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் தங்கள் பதவிக் காலத்தை மேலும் மூன்று ஆண்டுகளுக்கு நீட்டித்ததை எதிர்த்து சென்னை…
தர்மபுரி : இன்று தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில்…
சென்னை : சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக எம்எல்ஏ மயிலை வேலுவின் இல்லத் திருமண விழா நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட…
சென்னை : நடிகர், கார் ரேஸ் ஓட்டுநர் என பன்முக திறமையாளராக விளங்கும் அஜித் குமாருக்கு நேற்று முன்தினம் டெல்லியில்…
சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…
சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…