மீண்டும் கார்த்திக் – ஜெஸ்ஸி.! கௌதம் மேனன் இயக்கத்தில் ‘கார்த்திக் டையல் செய்த எண்’ டீசர்.!
கெளதம் மேனன் தனது பாணியில் இயக்கியுள்ள கார்த்திக் டையல் செய்த எண் எனும் குறும்படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. அதில் த்ரிஷா நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் தனது பாணியிலான காதல் ஆக்சன் படங்களை இயக்கி தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்துள்ளார் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் அடுத்ததாக ஜோஸ்வா, துருவ நட்சத்திரம் போன்ற படங்கள் வெளியாக காத்திருக்கின்றன.
தற்போது கொரோனா ஊரடங்கால் எந்தவித சினிமா ஷூட்டிங் வேலைகள் துவங்க முடியாமல் இருப்பதாலும், திரையரங்குகள் திறக்கப்படாமல் இருப்பதால் மக்கள் இணையதளத்தில் வெப் சீரிஸ் , குறும்படங்கள் பார்க்க துவங்கிவிட்டதாலும்,
இயக்குனர் கெளதம் மேனனும் தனது பாணியில் ஒரு குறும்படத்தை இயக்க தயாராகிவிட்டார். அதற்கு கார்த்திக் டையல் செய்த எண் என பெயரிட்டுள்ளார். இதன் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. அதில், த்ரிஷா நடித்துள்ளார். அதுவும் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் ஜெஸ்ஸி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் என தெரியவந்துள்ளது. மேலும், அதில் கார்த்தி இப்போ லாக்டவுன் இருப்பதால் மக்கள் குறும்படங்கள் பார்க்கிறார்கள் அதனால் நீ எழுது. உன் எழுத்து அழகாக இருக்கும் என கூறுவது போல் உள்ளது.
ஒரு வேலை சிம்புவையும், திரிஷாவையம் வைத்து விண்ணைத்தாண்டி வருவாயா தொடர்ச்சி போல சிறிய குறும்படத்தை வீட்டிலிருந்தே கெளதம் தயார் செய்துவிட்டாரா என முழு குறும்படமும் வெளியானால் தெரிந்துவிடும்.
விரைவில் எதிர்பார்க்கிறோம் கார்த்திக்கையும் ஜெஸ்ஸியையும் கெளதம் மேனனின் காதலையும்….
;