முதல் முறையாக சிவகார்த்திகேயனுடன் மோதும் கார்த்திக் ..!
தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் புதிய படமொன்றில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகும் இந்த படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அது போல நடிகர் கார்த்தி விருமன் மற்றும் சர்தார் ஆகிய இரு படங்களில் நடித்து வருகிறார். இதில், சர்தார் படம் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி தான் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதன் முறையாக சிவகார்த்திகேயன் மற்றும் கார்த்தி நேருக்கு நேர் மோத உள்ளதாக கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்க்கலாம்.