அய்யப்பனும் கோஷியும் படத்தின் தமிழ் ரீமேக்கில் கார்த்தி மற்றும் பார்த்திபன் அவர்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சச்சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான மலையாள திரைப்படம் ‘அய்யப்பனும் கோஷியும் ‘. அய்யப்பன் என்ற போலீஸ் அதிகாரியாக பிஜூ மேனனும், கோஷியாக பிருத்விராஜூம் நடித்திருந்தார்கள். இந்த படம் மலையாள சினிமாவை இந்திய அளவில் திரும்பி பார்க்க செய்து ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று பிளாக் பஸ்டர் ஹிட்டானது. வெறும் 5 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 50கோடி வரை வசூல் செய்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அய்யப்பனும் கோஷியும் படத்தின் இயக்குனரான சச்சி மாரடைப்பால் மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது.
சச்சிக்கு பெருமையை தேடி தந்த அய்யப்பனும் கோஷியும் படத்தை தமிழில் ரீமேக் செய்வதாகவும், அதனை வெற்றி படமான ஜிகர்தண்டா படத்தை தயாரித்த ஃபை ஸ்டார் கதிரேசன் அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. மேலும் இந்த படத்தில் பிஜூ மேனன் கேரக்டருக்கு சசிகுமார் மற்றும் சரத்குமார் ஆகியோரின் பெயர்களும், பிருத்விராஜ் கேரக்டரில் ஆர்யா, சிம்பு நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இயக்குநர் சச்சி மரணத்திற்கு முன்பு அளித்த பேட்டி ஒன்றில், தமிழில் ரீமேக் செய்யப்படும் அய்யப்பனும் கோஷியும் படத்தில் பிருத்விராஜ் நடித்த கதாபாத்திரத்தில் கார்த்தி அவர்களையும், பிஜூ மேனன் நடித்த கதாபாத்திரத்தில் பார்த்திபன் அவர்களும் நடித்தால் நன்றாக இருக்கும் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது இயக்குநர் சச்சியின் ஆசை நிறைவேறியுள்ளதாக கூறப்படுகிறது. ஆம் தமிழில் ரீமேக் செய்யப்படும் அய்யப்பனும் கோஷியும் படத்தில் கார்த்தி மற்றும் பார்த்திபன் அவர்கள் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விரைவில் இதனை குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…
டெல்லி : ஐபிஎல் 2025 சீசன் இன்னும் ஒரு வாரத்திற்குள் தொடங்கவுள்ள நிலையில், வரப்போகும் இரண்டு மாத கால கிரிக்கெட்…
சென்னை : 2025 - 2026 ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை அத்துறையின் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து, பல்வேறு புதிய…
வாஷிங்டன் : அமெரிக்க விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் ஜூன் மாதம் முதல் சர்வதேச…
சென்னை : தமிழ்நாட்டில் புதிய தேசிய கல்விக்கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிக்க முயற்சிப்பதாக தொடர்ந்து திமுக அரசு…