கார்த்தியை தொடர்ந்து வரும் வித்தியாசமான சினிமா மூடநம்பிக்கை!

நடிகர் கார்த்தியை வைத்து படம் எடுத்தால் அடுத்ததாக, பெரிய ஹீரோக்களின் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்ற நம்பிக்கை தற்போது கோலிவுட்டின் வேகமாக பரவி வருகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக ஒரு பெரிய லிஸ்ட் கோலிவுட்டில் பரவிவருகிறது.
அந்த லிஸ்டில் முதலில் இருப்பவர் சுசீந்திரன். கார்த்தியை வைத்து நான் மகான் அல்ல படத்தில் இயக்கினார். அதற்கு அடுத்ததாக விக்ரமை வைத்து ராஜபாட்டை எனும் படத்தை இயக்கி இருந்தார். அடுத்து சிறுத்தை படத்தை இயக்கிய சிவா. இவர் சிறுத்தை படத்தை அடுத்தது தல அஜித்துடன் தொடர்ந்து இயக்கி நான்கு படங்கள் முடித்து விட்டார்.
அடுத்ததாக பா.ரஞ்சித். மெட்ராஸ் படத்தை இயக்கி விட்டு அடுத்ததாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை தொடர்ந்து இருமுறை இறக்கிவிட்டார்.
கடைசியாக லிஸ்டில் இருப்பவர் இயக்குனர் H.வினோத். தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிவிட்டு தல அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி முடித்து விட்டு, தற்போது தல அஜித்தின் அடுத்த படத்தையும் இயக்கவுள்ளார். தற்போது இந்த லிஸ்டில் புதிதாக இணைந்துள்ளவர் கார்த்தியின் கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ். இந்த இயக்குனர்தான் தளபதி விஜயின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார்.
இந்த லிஸ்டில் அடுத்ததாக ரெமோ பட இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இணைவார் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஏனென்றால் இவர் தான் கார்த்தியின் புதிய படத்தை தற்போது இயக்கி வருகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025
“விருப்பமில்லாமல் செய்தால் தான் அது பாலியல் வன்கொடுமை” சீமான் மீண்டும் சர்ச்சை பேச்சு!
February 28, 2025