நடிகர் கார்த்தி சிறுத்தை படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக இரட்டை வேடங்களில் நடிக்கவுள்ளதாக தகவல்.
தமிழ் சினிமாவில் நடிகர் கார்த்தி முன்னணி நடிகராக வலம் வருகிறார். தற்போது இவர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் சுல்தான் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக வுள்ளது. இந்த படத்தை தொடர்நது இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்த படத்திற்கான படப்பிடிப்பை முடித்து விடுவார்.
இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் கார்த்தியின் 22 வது படத்தை இரும்புத்திரை, ஹீரோ போன்ற படங்களை இயக்கிய பி எஸ் மித்ரன் இயக்கவுள்ளார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்திற்கான பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து தற்போது இந்த படத்தில் நடிகர் கார்த்தி இரட்டை கதாபாத்திரத்தில் நடக்கவுள்ளதாகவும், படம் மிகவும் த்ரில்லராக இருக்கும் என்றும் தகவல் கிடைத்துள்ளது. நடிகர் கார்த்தி சிறுத்தை படத்தில் 2 வேடங்களில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரி : பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) புத்தாண்டு சிறப்பு பொதுக்குழு கூட்டம் இன்று (டிசம்பர் 28) புதுச்சேரி நாவற்குளம் நெடுஞ்சாலையில்,…
மெல்போர்ன் : சினிமா படத்தில் வரும் "இங்க வாய்ப்புன்றது நம்முளுக்கு அவ்ளோ சீக்கிரம் கிடைக்கிறது இல்ல இது நம்ப ஆட்டம்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில், இந்த சம்பவம்…
சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…
விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…
சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…