சுல்தான் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள்… உற்சாகத்தில் கார்த்தி ரசிகர்கள்..!

சுல்தான் படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் பாக்கிய ராஜ் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் சுல்தான். இந்த படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடிகை ரஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். தமிழில் இவருக்கு இதுதான் முதல் திரைப்படம் ஆகும். மேலும் இந்த திரைப்படத்தில் நடிகர் யோகி பாபு, ராமச்சந்திரன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தப் படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான பர்ஸ்ட் சிங்கிள் பாடல் நாளை மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் அதற்கான ப்ரோமோ வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவா தர லோக்கலாக இருப்பதால் இந்த பாடலுக்காக அணைத்து கார்த்தி ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளார்கள்.
#JaiSulthan Single from @Karthi_Offl sir #Sulthan Releasing Tomorrow 🙂
A VIVEK-MERVIN Musical ????#SulthanFirstSingle#SulthanSingleFromTommorrow@iamRashmika @Bakkiyaraj_k@iamviveksiva @sathyaDP @AntonyLRuben @dhilipaction@prabhu_sr pic.twitter.com/rrZPahp2pP
— Mervin Solomon (@MervinJSolomon) February 10, 2021