நம் வீட்டில் கடவுளின் ஆசீர்வாதம் இருக்கிறதா? இல்லையா?

Default Image
  • கடவுளை வணங்கும் போது நாம் செய்யும் முக்கிய செயல்களில் ஒன்று கற்பூரம் காட்டுவது.
  • அந்த கற்பூரமானது மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. அதன் பலன்கள் நம் உடலுக்கும் நல்லது தரும்.

நாம் கடவுளை கோவில் சென்று வணங்கும் போது அங்கு கர்ப்பகிரகத்தில் உள்ள கடவுள் சிலை நோக்கி கற்பூர தீபாராதனை காட்டப்பட்டு அந்த கற்பூரமானது நமக்கு காட்டப்படுகிறது. அதாவது பெரும்பாலான கோவில்களில் கருவறையில் மின்விளக்குகள் இருப்பதில்லை. கற்பூர ஒளியில் மூலம் மட்டுமே நாம் இறைவனை தரிசிக்க முடியும்.

கற்பூரத்திற்க்கு சுற்றியுள்ள நேர்மறையான ஆற்றலை ஈர்க்கும் சக்தி உள்ளது. இறைவனிடம் உள்ள நேர்மறை சக்திகளை ஈர்த்து வைத்து கொள்ளும். அந்த கற்பூரத்தை இரண்டு கைகளால் தொட்டு அந்த இளம் சூட்டினை நம் கண்ணில் ஒத்தி கொள்கிறோம். அந்த இளம் சூடு நம் கண்ணுக்கு நன்மை பயக்கும். மேலும், கற்பூர வாசனை நம் சுவாச பிரச்சனையையும் தீர்க்க வல்லது.

நம் வீட்டில் உள்ள சாமி படங்களுக்கு கற்பூர தீபாராதனை காட்டும்போது, முதலில் இறைவனின் தலை பகுதியில் இருந்து தீபாராதனை காட்ட கூடாது. முதலில் இறைவனின் பாதம், அடுத்ததாக வயிறு, அதன் பின்னராக முகம் என படிப்படியாக இறைனுக்கு கற்பூர ஒளியில் தீபாராதனை காட்ட வேண்டும். கடவுளுக்கு தீபாராதனை காட்டும் போது முதலில் இறைவனின் தலை பகுதியில் இருந்து தீபாராதனை காட்ட கூடாது.

கர்ப்பூரம் காட்டும் போது, சில சமயங்களில் பூக்கள் கீழே விழும், எலுமிச்சம்பழம் உருண்டு வந்து விழும். அல்லது கற்பூரம் தானாக அணைந்துவிடும். அந்த சமயம் அபசகுணம் என்று நினைத்துவிட வேண்டாம். கடவுள் ஆசீர்வாதம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் உள்ளது. என்பதே இதற்கான அறிகுறி.

எனவே, மீண்டும் அந்த கற்பூரத்தை ஏற்றி தீபாராதனை செய்யலாம். எந்தவித சலனமுமின்றி தீபாராதனை செய்யலாம். காலையில் குளித்துவிட்டு தீபாராதனை காட்டி, கடவுளை வணங்கிவிட்டு தூங்கும் போது, அன்றைய நாள் மிகவும் வெற்றிகரமாகவும் நல்லதாகவும் இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்