அடிதூள்…2021 ஆம் ஆண்டிற்கான “உலக அழகியாக” முடி சூட்டப்பட்ட கரோலினா!
முன்னதாக கொரோனா காரணமாக கடந்த ஆண்டு தள்ளி வைக்கப்பட்ட நிலையில்,மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 70-வது உலக அழகி போட்டி கரீபியன் தீவான போர்ட்டோ ரிகோவில் நடைபெற்றது.இப்போட்டியில்,அமெரிக்கா, இந்தோனேஷியா, மெக்சிகோ, வடக்கு அயர்லாந்து,இந்தியா உள்ளிட்ட 97 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்து கொண்டனர்.இந்தியா சார்பில்,ஹைதராபாத்தை சேர்ந்த மானசா வாரணாசி பங்கேற்றார்.
மிஸ் வேர்ல்ட்:
இந்நிலையில்,2021 ஆம் ஆண்டிற்கான உலக அழகியாக போலந்தின் கரோலினா பைலாவ்ஸ்கா முடி சூடியுள்ளார்.இது தொடர்பாக,கண்ணீர் மல்க கரோலினா கூறியதாவது: “என் பெயரைக் கேட்டதும் நான் அதிர்ச்சியடைந்தேன்,என்னால் இன்னும் நம்ப முடியவில்லை.மிஸ் வேர்ல்ட் கிரீடத்தை அணிவதில் நான் பெருமைப்படுகிறேன்,போர்ட்டோ ரிக்கோவில் நடந்த இந்த அற்புதமான அத்தியாயத்தை என் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்திருப்பேன்”,என்று கூறினார்.
யார் இந்த கரோலினா:
போலந்து நாட்டைச் சேர்ந்த கரோலினா தற்போது மேலாண்மையில்(Management) முதுகலைப் பட்டம் படித்து வருகிறார்.இவர் தன்னார்வத் தொண்டு செய்வதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.கரோலினாவின் “பியூட்டி வித் எ பர்பஸ்” திட்டமான “ஜூபா நா பீட்ரினி” என்பது நெருக்கடியில் இருக்கும் வீடற்ற மக்களுக்கு தொடர்ந்து உதவிகளை வழங்குகிறது.
உதவி-விழிப்புணர்வு:
மேலும்,வீடற்ற மக்களுடைய பிரச்சனையைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது மற்றும் சமூக ஒதுக்கீட்டிற்கு எதிராக போராடுகிறது. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அவர்கள் சூடான உணவுகள், பானங்கள்,ஆடைகள், முகக் கவசங்கள்,சட்ட ஆலோசனைகள் மற்றும் 300 பேருக்கு தொழில்முறை மருத்துவ உதவிகளை வழங்குகிறார்.
மேலும்,இந்த திட்டம் லோட்ஸில் வீடற்ற நெருக்கடியில் உள்ள மக்களுக்காக முதல் சமூக குளியலறையையும் கட்டி கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
View this post on Instagram
View this post on Instagram
மேலும்,இப்போட்டியில் அமெரிக்காவாழ் இந்தியரான ஸ்ரீ சைனி இரண்டாவது இடத்தையும்,ஐவரியைச் சேர்ந்த ஒலிவியா யாஸ் 3வது இடத்தையும் பிடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.