கர்நாடகாவில் குடியரசு தினவிழா கொண்டாடும் விதம்!
கர்நாடக அரசு சார்பில் குடியரசு தின விழா பெங்களூரு மானக்ஷா அணிவகுப்பு மைதானத்தில் நடைபெறுவது வழக்கம். காலை சரியாக 9 மணிக்கு கவர்னர் வஜூபாய் வாலா தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்துவார். அதைத்தொடர்ந்து கவர்னர் மேடையில் இருந்து இறங்கி திறந்த வாகனத்தில் சென்று பல்வேறு போலீஸ் பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொள்வார்.
இதன் பின்னர் அவர் குடியரசு தின விழாவில் சிறப்பு உரையாற்றுவார்.அதில் அவர் மாநிலத்தின் வளர்ச்சிப்பணி மற்றும் மாநிலத்தின் சிறப்புகள் குறித்து உரையாற்றுவார்.தொடர்ந்து அவர் மாநிலத்தின் வீர தீர செயல்களை புரிந்தவர்களுக்கு பதக்கங்களை வழங்குவார்.இதன் பின்னர் பள்ளி,கல்லூரி மாணவ மாணவிகளின் கலை நிகழ்ச்சி இடம்பெறும்.இதில் கதக், மோகினி ஆட்டம், யக்ஷகான, ராஜஸ்தான், மராட்டியம், டொள்ளுகுனிதா போன்ற நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும்.இதில் தேசப்பற்றை பறைசாற்றும் நடன நிகழ்ச்சிகள் இடம் பெறும்.
மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள் ….