“மேகதாது அணைக்கு ஒப்புதல் தருவதாக சொன்னார்கள்” – கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை…!
டெல்லி சென்றபோது மேகதாதுவுக்கு ஒப்புதல் தருவதாக அமைச்சர்கள் கூறினார்கள் என்று கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
கர்நாடக மாநிலம் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு, தமிழக அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில்,கர்நாடக மாநில முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி, எடியூரப்பா ஆகியோர், அணை கட்டியே தீருவோம் என்று கூறி வந்தனர்.அவர்களைத் தொடர்ந்து, கர்நாடகாவின் புதிய முதல்வராக பதவியேற்ற பசவராஜ் பொம்மை அவர்களும் மேகதாது அணை விவகாரத்தில்,கர்நாடக அரசு பின் வாங்கும் பேச்சுக்கே இடமில்லை.கண்டிப்பாக அணை கட்டைப்படும் என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில்,மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பாக விரைவில் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்கவுள்ளதாக கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.
மேலும்,இது தொடர்பாக அவர் கூறியதாவது:
“மேகதாது அணை கட்டுவது தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் சமர்பித்துள்ளோம். நான் டெல்லி சென்றபோது மத்திய அரசு இதுபற்றி பரிசீலிப்பதாக தெரிவித்தனர்.எனவே, விரைவில் மீண்டும் டெல்லி சென்று மத்திய அமைச்சர்களை சந்திக்கவுள்ளேன். உச்ச நீதிமன்ற தீர்ப்பு பற்றியும் தற்போதைய நிலவரம் குறித்தும் விரிவாக விளக்கவுள்ளேன்.
ஏனெனில்,முன்னதாக நான் டெல்லி சென்றபோது மேகதாதுவுக்கு ஒப்புதல் தருவதாக மத்திய அமைச்சர்கள் கூறினார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
DPR (Detailed Project Reports) of Mekedatu has been sent to the Centre. When I went to Delhi, they said they’ll give consent. I’ll leave for Delhi soon for it. I’ll meet the Union Ministers, let them know the actual situation & explain the SC order: Karnataka CM Basavaraj Bommai pic.twitter.com/vG2oxTsajw
— ANI (@ANI) August 9, 2021