பாஜக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஈஸ்வரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவிப்பு.
கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதற்காக பிரதான கட்சிகள் தங்கள் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சி இடையே தீவிர போட்டி நிலவி வருகிறது.
இந்த நிலையில், கர்நாடக மாநிலம் சிவமோகா தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான ஈஸ்வரப்பா தேர்தல் அரசியலில் இருந்து விலகுவதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதால் தனது பெயரை எந்த தொகுதிக்கும் பரிந்துரை செய்ய வேண்டாம் எனவும், தனது 40 வருட அரசியல் பயணத்தில் உடனிருந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியையும் தெரிவித்துள்ளார்.
கர்நாடகா சட்டப்பேரவை தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் இன்று மாலையில் வெளிவரும் எனக் கூறப்பட்ட நிலையில் ஓய்வு அறிவிப்பு வெளிவந்துள்ளது.
சென்னை : சீமான் தலைமையில் 2010ஆம் ஆண்டு மே மாதம் ஆரம்பிக்கப்பட்ட கட்சி 'நாம் தமிழர் கட்சி'. அப்போது முதல்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை நடிகர் விஜய் தொடங்கி வரும் பிப்ரவரி மாதத்தோடு ஓராண்டு நிறைவு…
டெல்லி : விண்வெளியில் இரண்டு செயற்கை கோள்களை ஸ்பேஸ் டாக்கிங் (Space Docking) செயல்முறை மூலம் இணைக்கும் நோக்கத்திற்காக ஸ்ரீஹரிகோட்டாவில்…
சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது.…
மதுரை : நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அண்மையில் கடலூர் மற்றும் புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்புகளின் போது…
சீனா : கார் ஒட்டிக்கொண்டு சாலையில் வேகமாக செல்லும் போது சில சமயங்களில், சாலைகளில் இருக்கும் மேடு பள்ளங்களை கவனிக்காமல்…