கர்ணன் எல்லோர் மனதையும் வெல்வான் – பா ரஞ்சித் ட்வீட்..!!
கர்ணன் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் பா.ரஞ்சித் ட்வீட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலே ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தை ரசிகர்கள் மட்டும் பார்க்காமல் பல சினிமா பிரபலங்களும் பார்த்த விட்டு தங்களது கருத்துக்களை கூறி வருகின்றார்கள். அந்த வகையில் இயக்குனர் பா ரஞ்சித் படத்தை பார்த்து விட்டு தனது ட்வீட்டர் பக்கத்தில் ” கர்ணன் எல்லோர் மனதையும் வெல்வான்.
மாரி செலவராஜ் வியக்கதக்க திரைமொழியில் தனுஷ் அபாரமான நடிப்பில், இசை
சந்தோஷ் நாராயணனன் &அனைத்து தொழிற்நுட்ப கலைஞர்களின் அசாத்திய வேலைபாடும் மிகவும் பாராட்டுக்குரியது. துணை நின்ற தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்களுக்கு நன்றிகள் கொண்டாடுவோம். என்று ட்வீட் செய்துள்ளார்.
கர்ணன் எல்லோர் மனதையும் வெல்வான். @mari_selvaraj வியக்கதக்க திரைமொழியில் @dhanushkraja அபாரமான நடிப்பில், இசை @Music_Santhosh &அனைத்து தொழிற்நுட்ப கலைஞர்களின் அசாத்திய வேலைபாடும் மிகவும் பாராட்டுக்குரியது. துணை நின்ற தயாரிப்பாளர் கலைப்புலி தாணு அவர்களுக்கு நன்றிகள்! கொண்டாடுவோம்!
— pa.ranjith (@beemji) April 9, 2021
இந்த கர்ணன் திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகி பாபு, நட்டி நடராஜன், கௌரி கிஷன், லால் போன்றார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.