சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும் என்று படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ட்வீட் செய்துள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துள்ளார். படத்தில் இருந்து பாடல்கள் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகின்ற நிலையில், நடிகர் தனுஷ் தனது ட்வீட்டர் பக்கத்தில் நாளை கர்ணன் படம் வெளியாகவுள்ளது என்பதை குறிப்பிட்டு புதிய போஸ்டர் ஒன்றை இன்று காலை வெளியிட்டிருந்தார்.
இதனை தொடர்ந்து தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரிக்க தொடங்கியுள்ளதால் தமிழக அரசு வருகின்ற ஏப்ரல் மாதம் 10 ஆம் தேதி முதல் திரையரங்குகளில் 50 % பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என்று அறிவித்தது. இதனால் கர்ணன் திரைப்படம் வெளியாகுமா இல்லையா என்ற குழப்பம் எழுந்த நிலையில், படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ட்வீட்டர் பக்கத்தில் ட்வீட் ஒன்றை செய்துள்ளார்.
இந்த ட்வீட்டில் ” சொன்னது சொன்னபடி கர்ணன் திரைப்படம் நாளை திரைக்கு வரும், அரசின் அறிவிப்பின் படி, 50% இருக்கைகளோடு தக்க பாதுகாப்புடன் திரையிட ப்படும், கர்ணன் திரைப்படத்திற்கு உங்கள் பேராதரவை தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன் ” என்று பதிவிட்டுள்ளார்.
இந்த கர்ணன் திரைப்படத்தை இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். மேலும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ள இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார்.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…