கர்ணன் திரைப்படம் வெளியான நாளிலிருந்து தற்போது வரை உலகம் முழுவதும் 83 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த 9ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று வெளியான திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, பிரியங்கா, சந்திரமௌலி, கௌரி கிஷன், போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்று நல்ல வசூலும் செய்துவருகிறது.
இந்த நிலையில் வெளியான நாளில் இருந்து தற்போது வரை உலகம் முழுவதும் எத்தனை கோடி வசூல் செய்துள்ளது என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது. அந்த வகையில், இந்த திரைப்படம் வெளியான நாளில் இருந்து தற்போது வரை உலகம் முழுவதும் 883 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் திரையரங்குகளில் 50 % பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படம் 100 கோடி வசூல் செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மெல்போர்ன் : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பார்டர் கவாஸ்கர் தொடரில் விளையாடி வருகிறது. நேற்று, 4வது…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) காலமானார். உடல்நலக்குறைவால் நேற்று காலமான…
டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக்குறைவால் நேற்றிரவு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…