கர்ணன் படத்தின் முழு கதையை என்னிடம் கூறவில்லை – யோகி பாபு..!!
கர்ணன் படத்திற்கான இசைவெளியிட்டு விழாவில் நடிகர் யோகி பாபு சில முக்கியான விஷியங்களை கூறியுள்ளார்.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். மேலும் படத்தில் இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால், ராஜீஷா விஜயன், லட்சுமி பிரியா, கௌரி கிஷன், நட்டி போன்றோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று இந்த படத்திற்கான இசைவெளியிட்டு விழா சென்னை பிரசாத் லேப்பில் வைத்து நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் இயக்குனர் மாரி செல்வராஜ், சந்தோஷ் நாராயணன், பாடகி தீ, யுகபாரதி, யோகி பாபு, நடராஜன் நட்டி, கௌரி கிஷன் போன்ற பலர் கலந்துகொன்டுள்ளார்கள்.
இந்த விழாவில் பேசிய நடிகர் யோகி பாபு கூறியதாவது, ” இந்த படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குனர் மாரி செல்வராஜ், தனுஷ், கலைப்புலி தாணு சார், அனைவருக்கும் மிக்க நன்றி படம் தொடங்கும்போதே என்னுடைய கதாபாத்திரம் குறித்து மாரி செல்வராஜ் சாரிடம் கேட்டேன். அதற்கு அவர் இது வரைக்கும் நீங்க காமெடிதான் பண்ணிட்டு இருந்தீங்க அதனால இந்த படத்துல உங்களுக்கு கதாபாத்திரத்தை மாத்தி பெரிய கதாபாத்திரம் கொடுத்து இருக்கிறேன் என்று கூறினார்.
என்னிடம் பரியேறும் பெருமாள் படத்தின் முழுக்கதையையும் கூறவில்லை இருந்தாலும் நான் அவரை நம்பி நடிக்க சென்றேன். இந்த படத்தின் கதையையும் அவர் என்னிடம் முழுவதுமாக கூறவில்லை. இந்த படத்தில் என்னுடைய கதாபாத்திரம் நன்றாக பேசக் கூடியதாக இருக்கும். மாரிசெல்வராஜ் சார் ஊர் மக்களுக்கு மிகவும் நன்றி மழை வெயில் என்று பார்க்காமல் நடித்தார்கள்” என்று பேசியுள்ளார்.