பொன்னியின் செல்வன் படத்தில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் கர்ணன் படத்தில் நடித்துள்ள லால் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். இந்த திரைப்படத்தில் நடிகர் விக்ரம், அமிதாப் பச்சன், சரத்குமார், ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு, நடிகை கீர்த்தி சுரேஷ், நயன்தாரா,அனுஷ்கா ஷெட்டி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி, ரஹ்மான், ஜெயராம் போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர்.
இரண்டு பாகங்களாக எடுக்க திட்டமிட்டுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பானது கடந்தாண்டு தாய்லாந்தில் வைத்து தொடங்கப்பட்டது.அதன் பின் கொரோனா வைரஸ் காரணமாக நிறுத்தப்பட்ட படத்தின் படப்பிடிப்பை ஜனவரியில் இருந்து ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் பிரமாண்ட அரங்குகள் அமைத்து மீண்டும் தொடங்கப்பட்டது.
அது சமீபத்தில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டிருந்தது.ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாகவும் ,இன்னும் 20% படப்பிடிப்பு மட்டுமே மீதமிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது வெளியான புது தகவலின்படி , பொன்னியின் செல்வன் படத்தில் இயக்குனரும் நடிகருமான லால் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அதிலும் அவர் இந்த படத்திலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . சண்டக்கோழி படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்த லால் மலையாளத்தில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகராக திகழ்பவர் என்பதும் , தற்போது இவர் தனுஷின் கர்ணன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.ஆனால் பொன்னியின் செல்வன் படத்தில் இவரது லுக் என்று கூறி புகைப்படம் ஓன்று வெளியாகி உள்ளது .அதில் வில்லன் என்றில்லாமல் அப்பாவி தோற்றத்தில் உள்ளார் .
சென்னை : தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ள நிலையில், வரும் 2026…
மஞ்சிஸ்டா மூலிகை பொடியை வைத்து முகப்பரு ,கரும்புள்ளி மறையை செய்து முக பொலிவை அதிகரிப்பது எப்படி என பார்க்கலாம் .…
மும்பை : இந்த ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகின்ற பிப்ரவரி 19ஆம் தேதி தொடங்கி அதற்கு அடுத்த மாதமான…
கொல்கத்தா : நாட்டில் மிகவும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்று கடந்த ஆண்டு மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் மருத்துவ…
சென்னை : பிக் பாஸ் சீசன் 8 தமிழ் ஆரம்பத்தில் எதிர்பார்புகளுடன் தொடங்கப்பட்டாலும் அதற்கு பிறகு சில நாட்கள் வரவேற்பு குறைந்தது…
ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுக்கள்…