கர்ணன் 2 வருமா..?? இயக்குனர் மாரி செல்வராஜ் பதில்..!!
கர்ணன் படத்தின் இரண்டாம் பாகத்திற்கு எதிர்பார்க்கலாம் என்று இயக்குனர் மாரி செல்வராஜ் கூறியுள்ளார்.
நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. வெளியான முதல் நாளிலே ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது மூன்றாவது நாளாக வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த படத்தை ரசிகர்கள் மட்டும் பார்க்காமல் பல சினிமா பிரபலங்களும் பார்த்த விட்டு தங்களது கருத்துக்களை கூறி வருகின்றார்கள்.
இந்த நிலையில் ரசிகர்களுடன் கர்ணன் படத்தை பார்த்த இயக்குனர் மாரி செல்வராஜ். அணைத்து ரசிகர்களும் தந்த வரவேற்பு மிகவும் சந்தோஷம் தருகிறது. அதனை தொடர்ந்து அவரிடம் கர்ணன் 2 விற்கு எதிர்பார்க்கலாமா என்று கேட்டதற்கு நிச்சியமாக எதிர்பார்க்கலாம் என்றும் கூறியுள்ளார்.
இந்த கர்ணன் திரைப்படத்தை தயாரிப்பாளர் கலைப்புலி தாணு தயாரித்துள்ளார்.இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக ரஜிஷா விஜயன் நடித்துள்ளார். யோகி பாபு, நட்டி நடராஜன், கௌரி கிஷன், லால் போன்றார் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.