கர்ணன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போம் தெரியுமா..?
இந்த கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 28ம் தேதி தனுஷ் பிறந்த நாள் அன்று வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ஜகமே தந்திரம் இந்த திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது மேலும் மே 1ஆம் தேதி வெளியாகவிருந்த இந்தத் திரைப்படம் கொரோனோ வைரஸ் காரணமாக ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது .
இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படத்தில் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் தனுசுக்கு ஜோடியாக, மலையாள நடிகை ரெஜிஷா நடித்து வருகிறார். மேலும், இப்படத்தில், யோகி பாபு, மலையாள நடிகர் லால், நடிகை லட்சுமி பிரியா ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில், இந்தப் படத்தின் படப்பிடிப்பு 90% முடிவடைந்த நிலையில் கொரோனா வைரஸ் காரனமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்கி முடிக்க வேண்டும் என்று படக்குழு முடிவெடுத்துள்ளார்களாம்.
இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் அப்டேட் தான் என்று தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர், மேலும் இந்த கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூலை 28ம் தேதி தனுஷ் பிறந்த நாள் அன்று வெளியிடுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.