கபிலா என்னையும் சைக்கிளில் ரவுண்ட் கூட்டிட்டு போ.! – வைரலாகும் ஹர்பஜன் ட்விட்.!
ஹர்பஜன் சிங் பதிவிட்டுள்ள ட்வீட் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
பா.ரஞ்சித் இயக்கத்தில் கடந்த ஜூலை மாதம் அமேசான் பிரேமில் வெளியான படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில் ஆர்யா கபிலன் கதாபாத்திரத்திலும், பசுபதி ரங்கன் வாத்தியார் கதாபாத்திரத்திலும் நடித்திருந்தனர். கபிலனுடன் வாத்தியார் சைக்கிளில் செல்லும் காட்சி மீம் டெம்ப்ளேட்டாக மாறியுள்ளது.
இந்த நிலையில், நடிகர் ஆர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் ஹீரோவாக நடித்துள்ள “பிரெண்ட்ஷிப்” படத்தின் ட்ரைலரை வெளியிட்டு தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
ஆர்யாவுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், ஹர்பஜன் சிங் தனது ட்வீட்டர் பக்கத்தில் ” கபிலா (ஆர்யா) என்ன ஒரு ரவுண்ட் அந்த சைக்கிள்ல கூட்டிட்டு போ பா
நன்றி ஆர்யா ஜி” என பதிவிட்டுள்ளார். அந்த ட்விட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கபிலா @arya_offl என்ன ஒரு ரவுண்ட் அந்த சைக்கிள்ல கூட்டிட்டு போ பா
நன்றி ஆர்யா ஜி !! https://t.co/OIFRNK1lVJ— Harbhajan Turbanator (@harbhajan_singh) September 6, 2021