நடிகர் பசுபதி உண்மையாக தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் கணக்கை தொடங்கியுள்ளார்.
இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் சார்பட்டா பரம்பரை. இந்த படத்தில்கலையரசன், பசுபதி, ஜான், ஷபீர் கல்லரக்கல் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். நேரடியாக அமேசான் பிரேமில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது. படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி சினிமா பிரபலங்கள் பலரும் பார்த்துவிட்டு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர்.
படத்தில் ரங்கன் வாத்தியார் என்ற கதாபாத்திரத்தில் நடித்த பசுபதி கதாபாத்திரம் பெரிதளவில் பேசப்பட்டது. ஆர்யாவுடன் அவர் சைக்கிளில் செல்லும் கட்சியை மீம் கிரியேட்டர் பல வகையில், மீமாக செய்து பதிவிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் பசுபதி பெயரில் போலி கணக்குகள் தொடங்கப்பட்டு போஸ்ட் செய்து லைக்குகளை பெற்று வருகிறது. இதனையடித்து தற்போது நடிகர் பசுபதி உண்மையாக தனது அதிகாரப்பூர்வ ட்வீட்டர் கணக்கை தொடங்கியுள்ளார்.
அவரை வரவேற்கும் வகையில், நடிகர் ஆர்யா தனது ட்வீட்டர் பக்கத்தில் ” வாத்தியாரே இதுதான் ட்வீட்டர். பாக்ஸிங் விட ரத்த பூமி. உன்னோட பேருல நிறையபேரு இங்க இருக்காங்கனு தெரிஞ்சி நாதாண்டா ஒரிஜினல்- னு உள்ள வந்த பாத்தியா வாத்தியாரே, உன் மனசே மனசு தான். வா வாத்தியாரே இந்த உலகத்துக்குள்ள போய் பார்க்கலாம்.” என பதிவிட்டுள்ளார்.
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் கொல்கத்தா ஈடன் கார்டன்…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. இதில்…
கொல்கத்தா : ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இன்று…
டெல்லி : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று அமெரிக்காவில் இறக்குமதியாகும் அயல்நாட்டு பொருட்கள் மீது அதிகப்படியான புதிய பரஸ்பர…
மதுரை : இன்று மதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது மாநாடு நடைபெற்று வருகிறது. வரும் ஏப்ரல் 6ஆம் தேதி…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…