தொடங்க இருக்கும் கபலீஸ்வரர் கோவில்..பங்குனி திருவிழா..!

Default Image

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழா மற்றும் விடையாற்றி கலை விழா வருகிற 29ந்தேதி கொடியேற்றத்தோடு  தொடங்குகிறது.

இவ்விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் பகல் மற்றும் இரவு நேரங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள் நடக்கிறது.விழாவின் முக்கிய  திருவிழாவான தேர்திருவிழா வருகிற 4ந்தேதி காலை 6 மணிக்கு சுவாமி மற்றும் அம்பாள் திருத்தேரில் எழுந்தருள்கின்றனர். இதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது.

திருவிழாவின் 5ந்தேதி மாலை 3 மணிக்கு அறுபத்து மூவர் திருவிழா நடக்க உள்ளது.இவ்விழாவையொட்டி காலை திருஞானசம்பந்தர் எழுந்தருளி,பூம்பாவை உயிர்பெற்று எழுகின்ற நிகழ்ச்சி நடக்கிறது. மாலையில் அறுபத்துமூவர் விழாவில் விநாயகர் முன்செல்ல, தொடர்ந்து பவளக்கால் சப்பரத்தில் நாயன்மார்களுடன் கபாலீசுவரர் கற்பகாம்பாள் மற்றும் வள்ளி தெய்வானையுடன் முருகப்பெருமானும், சண்டிகேசருடன் மாட வீதிகளில் வலம் வந்து அவர்களுடன் திருவள்ளுவர், வாசுகி, முண்டககண்ணி அம்மன், அங்காள பரமேஸ்வரி, திரவுபதி அம்மன், சிந்தாதிரிப்பேட்டை முத்துக்குமரன், கோலவிழி அம்மன் என பலரும் சேர்ந்து வீதி உலா வருகின்றனர்.இதைத் தொடர்ந்து வரும்7ந்தேதி திருக்கல்யாண காட்சியோடு விழா நிறைவு பெறுகிறது. விழா நாட்களில் நாதஸ்வர நிகழ்ச்சிகள் மற்றும் சொற்பொழிவுகளும் வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்