#கந்தசஷ்டி கவசம்- பாடுங்கள்-முருக பக்தர்கள் அழைப்பு
கந்த சஷ்டி கவசத்தை கொச்சைப்படுத்திய கருப்பர் கூட்டம் என்ற அமைப்பை கண்டிக்கும் வகையில் இன்று(ஜூலை 16) மாலை 5:00 மணிக்கு முருக பக்தர்கள் என அனைவரின் வீடுகளில் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்ய வேண்டும் முருக பக்தர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
முருகப் பெருமானை வழிபடும் வகைதனில் மிகவும் பரவசத்துடன் பாடப்படுவது கந்தர் சஷ்டி கவசம் இது முருக பக்தர்களின் மிகவும் புனித நூலாக கருத்தப்படுகிறது.ஆனால் கருப்பர் கூட்டம்’ என்கிற பெயரில் யு டியூப் சேனலில் இப்பாடலை மிகவும் ஆபாசமாக விமர்சித்துதது மட்டுமின்றி முருகனை நினைக்கின்ற ஒவ்வொருவரின் மனதையும் காயப்படுத்தும் விதமாக ஒருவர் பதிவிட்டார். இது ஹிந்துக்கள் மற்றும் முருக பக்தர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதை கண்டிக்கும் வகையிலும், கேவலமாக கொச்சைப்படுத்திய அந்த நபர்களை கைது செய்ய வலியுறுத்தியும், தமிழகமெங்கும் பல இடங்களில் நடவடிக்கை கோரி, போலீசில் புகார் அளிக்கப்பட்ட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த கருப்பர் கூட்டம் அமைப்பைக் கண்டித்து, ‘வெற்றிவேல் வீரவேல்’ என்கிற, ‘ஹேஷ்டேக்’ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
இந்நிலையில் இன்று ஆடி முதல் மட்டுமின்றி அதிலும் முருகப் பெருமானுக்கு உகந்த கார்த்திகை நட்சத்திரத்தில் வந்துள்ளதால் வீடுகள் தோறும் இன்று கந்த சஷ்டி கவசம் பாடிகடும் கண்டனம் தெரிவிப்போம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் இன்று மாலை, 5:00 மணிக்கு முருக பக்தர்கள் அனைவரும் கந்த சஷ்டி கவசம் பாடி நமது நம்பிக்கை, முருக பக்தியை வெளிப்படுத்த வேண்டும் என்று பல முருக பக்தர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த பிரச்சணைக் குறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சண்முகம் கூறுயதாவது :சமூக வலைதளங்களில், மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்ற வகையிலும், நாட்டை காட்டிக்கொடுக்கும் வகையிலும் யார் ஒருவர் செயல்பட்டாலும், அவர்கள் மீது சட்டப்படி மிக கடுமையான நடவடிக்கைப் பாயும் என்று தெரிவித்துள்ளார்.