மக்களுக்காக குரல் கொடுக்க தயங்குபவர்கள் அந்த இடத்தில் இருக்க தகுதியற்றவர்கள்! – கங்கனா ரனவத் காட்டம்!

Default Image
  • குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எந்தவித கருத்தையும் சில முன்னணி பாலிவுட் நடிகர்கள் கருத்து கூறாமல் இருந்து வருகின்றனர்.
  • இதுகுறித்து கங்கனா ரனவத் ஒரு பேட்டியில் குறிப்பிடும்போது, அவர்கள் முதுகெலும்பு இல்லாத கோழைகள் என கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டமானது, நாட்டின் பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.  இச்சட்டத்திற்கு எதிரான போராட்டங்கள் மக்களிடையே தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இது குறித்து பாலிவுட் பிரபலங்கள் முக்கிய நடிகர்களும் இதுகுறித்து கருத்து தெரிவிக்காமல் இருப்பது பற்றி பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் அண்மையில் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. அதற்கு கங்கனா ரனாவத்,

‘சட்டத்திருத்தம் குறித்து வாய் திறக்காமல் இருப்பதற்கு நடிகர்கள் வெட்கப்படவேண்டும். அவர்கள் முதுகெலும்பு இல்லாத கோழைகள் என காட்டமாக கூறினார். மேலும், மக்களால் தான் அவர்கள் பெரிய நடிகர்களாக உருவாக்கப்பட்டார்கள் என்பதை நினைவில் வைத்து மக்களுக்காக குரல் கொடுக்க வேண்டும். அவ்வாறு குரல் கொடுக்காமல் பயந்து ஒதுங்கினால், அவர்கள் அந்த இடத்தில் இருக்க தகுதியற்றவர்கள். ‘ என காட்டமாக தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், இன்ஸ்டாகிராமில் போட்டோக்கள் பதிவிடுவது மட்டுமே நடிகருடைய வேலையில்லை. நாட்டில் நடக்கும் பிரச்சனைகள் குறித்தும் தைரியமாக தங்கள் கருத்தையும் தெரிவிக்க வேண்டும். அதற்கு அவர்கள் முன் வர வேண்டும்.’ என்று கங்கனா தனது கருத்தை தைரியமாக தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்