கங்கனா ரணாவத் தான் தங்கியிருந்த ஓட்டலில் சஞ்சய் தத் தங்கியிருப்பதை அறிந்தவுடன் அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார்.
பாலிவுட் நடிகரான சஞ்சய் தத் தற்போது கே.ஜி.எஃப் -2 படத்தில் நடித்து வருகிறார்.சமீபத்தில் இவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இந்த நிலையில் தற்போது சிகிச்சையை முடித்த சஞ்சய் தத் மீண்டும் கே.ஜி.எஃப் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார்.
அதற்காக ஐதராபாத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கியுள்ளார் .அதே ஹோட்டலில் நடிகை கங்கனா ராணவத்தும் தங்கி படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார்.இந்த நிலையில் சஞ்சய் தத் தான் தங்கியுள்ள ஓட்டலில் தான் உள்ளார் என்பதை தெரிந்து கொண்ட கங்கனா உடனடியாக சஞ்சய் தத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்துள்ளார் .
இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்த கங்கனா , ஐதராபாத்தில் நான் தங்கியிருக்கும் அதே ஓட்டலில் அவர் தங்கியிருப்பதை அறிந்தவுடன் இன்று காலை சஞ்சய் சாரை பார்க்க சென்றேன் .அவரது நீண்ட ஆயுளுக்கும் நல்ல ஆரோக்கியத்திற்கும் பிரார்த்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.கங்கனா ரணாவத் தற்போது ஏ.எல்.விஜய் இயக்கத்தில் தலைவி படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…