ஜெயலலிதாவை தொடர்ந்து இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா ரணாவத்.!
நடிகை கங்கனா ரணாவத் அடுத்தப்படியாக மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் வேடத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம் தலைவி.ஏ.எல்.விஜய் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஜெயலலிதாவாக கங்கனாவும் , எம்ஜிஆர்-ஆக அரவிந்த் சாமியும் நடித்துள்னர் . ரிலீஸ்க்கு தயாராக உள்ள இந்த படத்தினை தொடர்ந்து மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி வேடத்தில் கங்கனா ரணாவத் நடிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமீபத்தில் அளித்த பேட்டியில் கங்கனா கூறியதாவது ,ஒரு புத்தகத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட உள்ள இந்த திரைப்படம் இந்திரா காந்தியின் வாழ்க்கை வரலாற்று படமல்ல என்றும், அரசியல் வரலாற்று படமென்றும் , இப்படத்தினை சாய் கபீர் இயக்கவுள்ளதாகவும்,அதற்கான திரைக்கதை உருவாக்கும் பணிகள் நடந்து வருவதாகவும் கூறியுள்ளார்.முக்கியமான பல நடிகர்கள் நடிக்கும் இந்தப் படத்தில் நடிக்க ஆர்வமாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.