நம்பர் 1 ட்ரெண்டிங்கில் மாஸ் காட்டும் “கண்டா வரச்சொல்லுங்க” பாடல்..! கொண்டாடும் தனுஷ் ரசிகர்கள்..!

கர்ணன் படத்திலிருந்து வெளியான கண்டா வரச்சொல்லுங்க பாடல் 3 மில்லியனிற்கும் மேல் பார்வையாளர்களை கடந்து 2 லட்சத்திற்கும் மேல் லைக்குகளை பெற்று யூடியூபில் நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ளது.
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கர்ணன். நடிகை ராஜீஷா விஜயன் இந்த படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் யோகி பாபு, லால் மேலும் சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்துள்ளார்.
இந்த திரைப்படம் வருகின்ற ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனை தொடர்ந்து இந்த படத்திலிருந்து முதல் பாடலான கண்டா வரச்சொல்லுங்க என்ற பாடல் வெளியானது. வெளியான சில மணி நேரத்திலே ரசிகர்களுக்கு மத்தியில் இந்த பாடலுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது, இந்த நிலையில் தற்போது இந்த பாடல் வெளியாகி 2 நாட்கள் ஆன நிலையில், யூடியூபில் 3 மில்லியனிற்கும் மேல் பார்வையாளர்களை கடந்து 2 லட்சத்தி 87,000 லைக்குகளை பெற்று நம்பர் 1 ட்ரெண்டிங்கில் உள்ளது. இதனை தனுஷ் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகிறார்கள்.
The Soul Stirring and Intense #KandaaVaraSollunga Song From @dhanushkraja ‘s #Karnan Crosses
Million+ Views And Is Trending No
on @YouTubeIndia !
Are You Playing it On Loop ? ????@Music_Santhosh @theVcreations @mari_selvaraj @rajishavijayan @natty_nataraj @EditorSelva pic.twitter.com/mj9IvkBePU— Think Music (@thinkmusicindia) February 20, 2021