ட்விட்டரில் கவிதை பதிவிட்ட கமல்….புரியாமல் திணறிய ரசிகர்கள்…!!
கமல்ஹாசன் ஒரு இந்திய திரைப்பட நடிகர், திரைப்பட இயக்குனர், திரைக்கதை எழுத்தாளர், தயாரிப்பாளர், பின்னணி பாடகர், பாடலாசிரியர் மற்றும் அரசியல்வாதி என்ன பல முகங்களை கொண்டுள்ளவர். இவர் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்தவர். இவர் மேலும் தெலுங்கு , இந்தி , மலையாளம் , பெங்காலி மற்றும் கன்னட படங்களிலும் நடித்துள்ளார். இவர் தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ளார். அதுமட்டுமின்றி, தற்போது “மக்கள் நீதி மையம்” என்னும் அரசியல் கட்சியை துவங்கியுள்ளார்.
இந்நிலையில், கமல்ஹாசன் காந்திஜெயந்தி அன்று தனது ட்விட்டரில் கவிதை ஒன்றை பதிவிட்டிருந்தார். இந்த கவிதையின் அர்த்தம் புரியாமல் பலர் தவிர்த்துக்கொண்டு வந்தனர். ‘காந்தியின் 150வது பிறந்த நாளின்போது மத்திய பிரதேசத்தில் காந்தியின் அஸ்தியை சிலர் திருடிச் சென்று விட்டனர்’ இதற்காக தான் கமல் இந்த ட்விட் பதிவிட்டுள்ளார் என கண்டுபிடிக்கப்பட்டது.
இதோ அந்த கவிதை…
“எம் காந்தியின் திருநீற்றை களவுற்ற பக்தர்காள்
உம் நெற்றியில் பூசிடவைத்த
அச்சாம்பலை ஏற்றதில் மகிழ்கிறோம்.
இன்னமும் உளதுநீர் சுட்டதின் பிணக்குவியல்
சுட்டிக்கூடிய உம்பக்தியின் அடிநாதம் காந்தியின்
சாம்பலுடன் கைலாமெய்தவே
கணக்கிலா இந்தியர்கள்
வழிகோலுகின்றோம்
வாழ்த்துடன்கூடியே…” – கமல் ஹாசன்