கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இன்று முதல் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.
ஷங்கரின் இயக்கத்தில் கமல் தற்போது நடித்து வருகின்ற திரைப்படம் இந்தியன் 2. இந்த படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள பூந்தமல்லியில் நடைப்பெற்று வந்தது. அப்போது இப்படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் பல பேர் காயமடைந்தனர் . இச்சம்பவம் சினிமா துறையில் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தது. கொரோனா வைரஸ் காரணமாக மூன்று மாதங்களுக்கு மேலாக படப்பிடிப்புகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
லைக்கா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் அவர்கள் இசையமைக்கிறார். மேலும் கமலுடன் காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத்தி சிங், பிரியா பவானி சங்கர், நெடுமுடி வேணு, பாபி சிம்கா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.இந்த படத்தில் 30ஆயிரம் பேரை வைத்து சண்டை காட்சிகளை எடுப்பதற்கான வேலைகளில் ஈடுபடும் போது தான் விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. ஒரு வயதான சுதந்திர போராட்ட வீரர் அரசியல்வாதிகளில் ஊழல் செய்பவர்களை களை எடுத்து, இறுதியாக போலீசாரிடம் சரணடைவது போன்று தான் கதையாம். இந்த படம் இடைவேளைக்குப் பிறகு தான் செம மாஸ்ஸாக இருக்கும் என்று கூறப்படுகிறது தற்போது படத்தின் கதை கசிந்துள்ளதால் ஷங்கர் மற்றும் கமல்ஹாசன் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் சென்னையில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை துவங்கவுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு பணிகளை விரைவில் முடிப்பதோடு, மீதமுள்ள காட்சிகளையும் விரைவில் படமெடுத்து முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…