பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமலஹாசன் நடித்த பிரம்மாண்ட வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். தற்போது இந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த படத்திலும் கமல்ஹாசன் ஹீரோவாக நடித்து வருகிறார். சித்தார்த், பிரிய பவனிசங்கர், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங் என பலர் இப்படத்தில் நடித்து வருகின்றனர். லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக இப்படத்தை தயாரித்து வருகிறது. அனிருத் இசையமைத்து வருகிறார்.
இப்படத்தில் கமல்ஹாசன் முதல் பாகம் போலவே விடுதலை போராட்ட வீரர் சேனாதிபதியாக நடித்து வருகிறார். அவரது 90 வயது தோழியாக காஜல் அகர்வால் நடிக்கிறார் என்று ஏற்கனவே செய்திகள் வெளியாகின. தற்போது முதல் பாகத்தில் கமலுக்கு மனைவியாக நடித்த நடிகை சுகன்யா கதாபாத்திரத்தில் யார் நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சுகன்யா நடித்திருந்த அமிர்தவள்ளி கதாபாத்திரத்தில் பிரியா பவானிசங்கர் தான் நடிக்கிறாராம். இந்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த படத்தில் சித்தார்த்துக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். இப்படம் பற்றிய மேலும் அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…
சென்னை : அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட பெண்…