தலைவன் இருக்கிறன் படத்திற்கு பிறகு இசைப்புயலை அனைவரும் பாராட்டுவர்! – கமலஹாசன் பெருமிதம்!
ஷங்கர் இயக்கத்தில் நடிகர் கமல் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை அடுத்து “தலைவன் இருக்கிறான்” என்ற படத்தை இயக்கி, அதில் அவரே நடித்து, அவரே தயாரிக்க உள்ளார். இந்த படத்திற்கு இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.
மேலும் இதுகுறித்து கமல் ஒரு நிகழ்ச்சியில் கூறுகையில், “இந்த படத்தில் இரண்டு பாடல்கள் முடிவடைந்து விட்டது. இப்பட ரிலீசிற்கு பிறகு A.R.ரஹ்மானின் இசைக்கூறித்தே அனைவரும் பேசுவார்கள்’ என பெருமையாக கூறினார்.