”நாம் சாதித்துவிட்டோம்” ஜோ பைடனுடன் தொலைபேசியில் கமலா ஹாரிஸ்..!
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலின் வாக்கு எண்ணிக்கை 4 நாட்களாக நடைபெற்றது. இதனால், தேர்தலில் முறைகேடு நடப்பதாக அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார்.
அதிபர் தேர்தலில் வெற்றி பெற 270- தேர்தல் வாக்குகள் பெற வேண்டும். ஆனால், ஜோ பைடன் 290 -தேர்தல் வாக்குகளும், டிரம்ப் 214-தேர்தல் வாக்குகளும் பெற்றனர். இந்நிலையில், ஜோ பைடன் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணை அதிபராக தேர்வு கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டார்.
துணை அதிபர் கமலா ஹாரிஸ் ஜோ பைடனுடன் தொலைபேசியில் வெற்றி குறித்து பேசினார். அப்போது, ”நாம் சாதித்துவிட்டோம் நீங்கள் அமெரிக்காவின் அடுத்த அதிபராகப் போகிறீர்கள்” என கூறினார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.
We did it, @JoeBiden. pic.twitter.com/oCgeylsjB4
— Kamala Harris (@KamalaHarris) November 7, 2020