“ஜோ பைடனை விட கமலா ஹாரிஸ் மோசமானவர்”- அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

குடியரசு கட்சி வேட்பாளர் ஜோ பைடனை விட, துணை அதிபர் வேட்பாளராக நியமிக்கப்பட்டுள்ள கமலா ஹாரிஸ் மோசமானவர் என அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம் சாட்டினார்.
அமெரிக்காவில் கொரோனா வைரஸ் அதிகளவில் பரவிவருகிறது. ஆனால் அங்கு கொரோனாவைப் பற்றி பேசுவதை விட, நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலை பற்றி பேசும் பேச்சுக்களே அதிகளவில் உள்ளது. இதன்காரணமாக, அங்கு தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த தேர்தலில் முக்கியமாக இரண்டு கட்சிகள் கருதப்படுகிறது. அது, ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி. குடியரசு கட்சி சார்பாக தற்பொழுதுள்ள அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார். மேலும், ஜனநாயக கட்சியின் சார்பாக முன்னாள் துணை அதிபரான ஜோ பைடன் போட்டியிடுகிறார்.
அமெரிக்காவில் தேர்தல் தொடங்க இன்னும் 100 நாட்களுக்கும் குறைவே உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரச்சாரங்கள் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில், ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், இந்திய தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸை துணை அதிபராக நியமிக்க உள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்தார்.
இதற்கு பல தரப்பு மக்கள் வரவேற்பு தெரிவித்து வந்தனர். அதுமட்டுமின்றி, அமெரிக்காவில் வசிக்கக்கூடிய இந்தியர்களின் வாக்குகள், ஜனநாயக கட்சிக்கே செல்லும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக, வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் மற்றும் ஜனநாயக கட்சியின் வேட்பாளர் டிரம்ப், ஜோ பைடன் அதிபராக பதவியேற்றால், காவல்துறையின் ஒவ்வொரு பிரிவையும் வலுவிழக்க வைக்கும் சட்டத்தை இயற்றுவார் எனவும், அவரைவிட கமலா ஹாரிஸ் ரொம்ப மோசமானவர் என குற்றம் சாட்டினார்.
அதுமட்டுமின்றி, கமலா இந்திய பாரம்பரியத்தைச் சேர்ந்தவர் எனவும், அவருக்கு இருக்கும் இந்தியர்கள் ஆதரவைவிட எனக்கு இந்தியர்களின் ஆதரவு அதிகம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதற்கு முன், காவல் துறைக்கு வழங்கப்படும் நிதி உதவியை ஜோ பிடன் நிறுத்தி விடுவார் என அதிபர் ட்ரம்ப் விமசர்னம் செய்தது, கமலா ஹாரிஸை ஒரு ஆங்கர் பேபியாக இருந்துகொண்டு துணை அதிபர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார் என கூறியது குறிப்பிடத்தக்கது.